படத்தொகுப்பு

இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – ஆகஸ்டு

This gallery contains 5 photos.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) திருவல்லிகேணி பகுதியில் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தல் – விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது (அல்ஹம்துலில்லாஹ்)சமுதாய மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பிரச்சாரம் இன்னும் வீரியமாக தொடர துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்..இவண்S.அப்துல் காதர் (மாணவரணி செயலாளர்) ஜமுமுக – JMMK 8608747427

போராட்ட கோரிக்கைகள்

ஏக இறைவனின் திருப்பெயரால்..
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே…
போராட்ட கோரிக்கைகள்
  • சாதிகள் இல்லாத இஸ்லாத்தில் தக்னி,லப்பை,மரைக்காயர்,ராவுத்தர்,அன்சர் ஷேக்,சையத், தூதேகுலா,மாப்பிள்ளா என்று பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் அனைத்தையும் நீக்கி இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் 10%ம்,மாநிலத்தில் 5% ம் இட ஒதுக்கீடு வழங்க கோரியும்..
  • பக்ரித் பண்டிகையின் போது முஸ்லிம்கள் ஆடு,மாடு,ஒட்டகங்களை,குர்பானி கொடுப்பதற்கு ஒவொரு வருடமும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் புளு-கிராஸ் அமைப்பின் முஸ்லிம் விரோத போக்கை வன்மையாக கண்டிப்பதோடு,அந்த அமைப்பின் முஸ்லிம் விரோத செயல்களை கட்டுபடுத்த கோரியும்.
  • குஜராதில் முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடி,இஸ்லாமிய பெண்களின் கற்புகளை சூறையாடி,மூவாயிரதிக்கும் மேலான உயிர் கொலைகளுக்கு காரணமான நரேந்திர மோடியின் குற்றங்கள் நிரூபிக்க படாமல் கலவர வழக்கில் இருந்து தப்பிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசின் போக்கை வன்மையாக கண்டித்தும்..
  • தமிழக அரசு ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி கட்டணங்களில் சழுகை வழங்க கோரியும்.
  • தமிழ்நாடு வக்பு வாரிய ஊழல்களை ஒழிக்க முதல்வரின் நேரடி கண்காணிப்பில் கண்காணிப்பு மையம் அமைக்க கோரியும்..
நடை பெற உள்ள சம உரிமை போராட்டத்திற்கு சமுதாயமே ! அணிதிரண்டு வாரீர்..